இருட்டிலேயே ராமர் எல்லா வேலையும் செய்கிறார்!! சர்ச்சையாக மேடையில் பேசிய பயில்வான்..
Bayilvan Ranganathan
Adipurush
By Edward
சினிமாவை சேர்ந்த நடிகைகள் நடிகர்களின் அந்தரங்க விசயங்களை படுமோசமான வார்த்தையில் பயன்படுத்தி விமர்சித்து வருபவர் பயில்வான் ரங்கநாதன். எல்லைமீறிய அவரது பேட்டியால் பலர் கடுமையாக விமர்சித்தும் கண்டனங்களை தெரிவித்தும் வருகிறார்கள்.
அந்தவகையில் சமீபத்தில் நடந்த ஒரு திரைப்படத்தின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு மேடையில் பேசியிருக்கிறார் பயில்வான்.
அதில், பான் இந்தியா படமாக பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கிறாங்க, அந்த படத்துக்கு குரங்கு கூட வரல. அந்த அளவிற்கு ஒரு படம் எடுத்திருக்காங்க.
பேசிக்கலா அது ராமாயணம்-ன்னு சொல்றாங்க, ராமாயணமாயா இது. இருட்டிலேயே ராமர் எல்லா வேலையும் செய்கிறார்.
ராவணன் பார்த்து முஸ்லீம் பாஷா மாதிரி இருக்கார் என்று ஆதிபுருஷ் படத்தினை படுமோசமாக விமர்சித்து பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.