அண்ணன் தங்கைக்கான மரியாதை போய்விட்டது! நடிகை ஷிவானி - பாலா செய்த செயல்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேறபை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். சமீபத்தில் நடிகர் ஆரி சீசன் 4ன் டைட்டிலை கைபற்றினார். அடுத்ததாக 5 வது சீசன் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
4 வது சீசனில் பல காதல் சர்ச்சையில் சிக்கியவர்கள் நடிகை ஷிவானி - பாலாஜி. இருவரும் காதலிப்பதாகவும் அவர்களின் செயலால் ஷிவானி அம்மா கடுமையாக திட்டினார்கள் என்பது ரசிகர்கள் அறிந்ததே. இதையடுத்து நல்ல நண்பர்களாக இருக்கும் புகைப்படங்களை அம்மாவுடன் சேர்ந்து வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் ரக்ஷன் பந்தனின் போது பாலாஜி ஷிவானிற்கு நேரில் சென்று வாழ்த்துக்களை கூறியுள்ளார். காதல் கிசுகிசுக்களில் சிக்கி நிலையில் அண்ணன் தங்கையாக மாறிட்டாங்களே என்று நெட்டிசன்களும் ரசிகர்களும் ஷாக்காகி கருத்துக்களை தெர்வித்து வருகிறார்கள். தற்போது ஷிவானி நடிகர் கமலின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

