ஒரே ஆண்டில் ஐபிஎல் மூலம் இத்தனை கோடி வருமானம்!! குஷியில் பிசிசிஐ..
Board of Control for Cricket in India
International Cricket Council
IPL 2025
By Edward
ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) நடத்தி வருகிறது. கடந்த 2024 - 25 நிதியாண்டில் சுமார் ரூ. 9742 கோடி என்ற மிகப்பெரிய தொகையை வருமானமாக பிசிசிஐ ஈட்டியுள்ளது. அதுவும் ஒரே ஆண்டில் இத்தனை ஆயிரம் கோடியை சம்பாதித்திருக்கிறது.
அதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஐபிஎல் தொடர்தானாம். பிசிசிஐ மொத்த வருமானத்தில் பாதிக்கும் மேல் அதாவது 59 சதவீதம் தொலை ஐபிஎல் தொடரின் மூலம் கிடைத்துள்ளது. இதன் மதிப்பு மட்டும் சுமார் ரூ. 5761 கோடியாம்.
ஐபிஎல் தொடரை தங்க முட்டையிடும் வாத்து என்று பிசிசிஐ அழைக்கிறார்கல். ஐபிஎல் தவிர வேறு எந்த வழியில் பணம் வருகிறது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
மற்ற வருமானங்கள்
- உலக தலைமை அமைப்பான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (பிசிசி) பிசிசிஐக்கு 1042 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
- பிசிசிஐ வங்கியில் போட்டு வைத்துள்ள பணத்திற்கு வட்டியாக ரூ. 987 கோடி கிடைத்துள்ளது. வங்கி வைப்புத்தொகையாக ரூ. 10 ஆயிரம் கோடியை தாண்டுமாம். ஓர் ஆண்டுக்கு 987 கோடி ரூபாயை வட்டியாக வங்கி கொடுத்திருக்கிறது.
- ஐபிஎல் மற்றும் இந்திய அணி விளையாடும் மற்ற சர்வதேச போட்டிகளை ஒளிபரப்ப தொலைக்காட்சி உரிமைக்காக ரூ. 813 கோடி கிடைத்துள்ளது.
- மகளிர் ஐபிஎல் போட்டி மூலம் ரூ. 378 கோடி வருமானம் வந்துள்ளது.
- இந்தியாவில் நடக்கும் சர்வதேசப் போட்டிகளின் டிக்கெட் விற்பனை மற்றும் பிற உரிமைகள் மூலம் ரூ.361 கோடி கிடைத்திருக்கிறது.
இந்த வருமானங்கள் அனைத்தும் சேர்த்து பிசிசிஐ உலகின் மிகப்பெரிய பணக்கார கிரிக்கெட் வாரியம் என்ற பெருமையை பெற்றுள்ளது.