டாட்டா காட்டிய காதலி!! நிச்சயத்துடன் நின்று போன விஜய் பட நடிகரின் திருமணம்..

Vijay Beast Tamil Actors Jigarthanda DoubleX
By Edward Aug 04, 2024 10:30 AM GMT
Report

மலையால சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஷைன் டாம் சாக்கோ, சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து சால்ட் அண்ட் பெப்பர், சாப்டர்ஸ், 5 சுந்தரிகள், வினோத் அக்கா சூண்டா, டா தடியா உள்ளிட்ட படங்களில் நடித்தும் வில்லன், குணச்சித்திர ரோல் உள்ளிட்ட பல ரோலில் நடித்து நல்ல இடத்தினை பிடித்தார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் தீவிரவாதி ரோலில், கடைசியில் உதவி செய்பவராக நடித்திருக்கிறார். தான் நடித்த பீஸ்ட் படத்தை சோசியல் மீடியாவில் கிண்டலடித்திருந்தார்.

டாட்டா காட்டிய காதலி!! நிச்சயத்துடன் நின்று போன விஜய் பட நடிகரின் திருமணம்.. | Beast Actor Shine Tom Chacko Opens Up Breakup

பின் சர்ச்சையானதும் மன்னிப்பும் கேட்டார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தசரா உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு தற்போது 40 வயதாகிறது. தபீதா மேத்யூஸ் என்பவருடன் திருமணமாகி பெண் குழந்தை பெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதன்பின் நீண்ட நாள் தோழி தனுஜா என்கிற மாடல் அழகியுட்ன நிச்சயதார்த்தத்தையும் ஏப்ரல் மாதம் முடித்திருந்தார். நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலானதை அடுத்து ஷைன் டாம் சாக்கோ, காதலியின் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் இருந்து நீக்கியதால் பிரிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

டாட்டா காட்டிய காதலி!! நிச்சயத்துடன் நின்று போன விஜய் பட நடிகரின் திருமணம்.. | Beast Actor Shine Tom Chacko Opens Up Breakup

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இப்போது நான் சிங்கிளாக இருப்பதாகவும் என்னதான் உண்மையான அன்பு வைத்திருந்தாலும் கூட அந்த உறவை தன்னால் தக்க வைத்து கொள்ள முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

மீண்டும் டேட்டிங் ஆப் பக்கம் சென்று பெண் தேடும் வேலையை ஆரம்பித்துள்ளதாகவும் தனக்கு பிடித்தவர்களை கன்வைன்ஸ் பண்ணுவதில் சவால்களை சந்தித்து வருவதாகவும் நடிகர் ஷைன் டாம் சாக்கோ தெரிவித்துள்ளார்.