புறாவுக்கே பெல் அடிச்சவராச்சே!! பீஸ்ட் படத்துல ஸ்கேட்டிங்கில் இப்படியொரு ரிஸ்க் எடுத்த தளபதி..

Vijay Beast
By Edward May 28, 2022 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில்முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான் படம் பீஸ்ட். இயக்குனர் நெல்சன் சன்பிச்சர்ஸ் கூட்டணியில் கடந்த ஏப்ரல் 13 ஆம்தேதி வெளியாகி 200 கோடி வசூலை பெற்றது.

படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் இப்படத்தில் அமைந்த கிளைமேக்ஸ் காட்சிகள் இணையத்தில் வைரலாகி ட்ரோல் செய்யப்பட்டது. தற்போது விஜய் பீஸ்ட் படத்தில் மாலில் வைக்கப்பட்ட ஸ்கேட்டிங் காட்சி பற்றி ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு பகிர்ந்துள்ளார்.

டப் வேண்டாம் நானே செய்கிறேன் என்று தளபதி விஜய் கூறினார் என்றும் அதை எங்கும் விழாமல் சூப்பராக ஸ்கேட்டிங் காட்சியை முடித்து கொடுத்தார்.

இதற்கு முன் 23 வருடங்களுக்கு முன் மின்சார கண்ணா படத்தில் ஊதா ஊதா ஊதாப்பூ பாடலில் ஸ்கேட்டிங் செய்திருப்பார்.

அதற்கு பின் இப்போது தான் செய்கிறேன் என்றும் கூறினாராம். புறாவுக்கே பெல் அடிச்சவராச்சே ஸ்கேட்டிங் பண்ணமாட்டாரா என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.