திரை தீப்பிடிக்கும்-னு சொன்னது சரிதான்? தியேட்டர்ல வெடி வெச்சா பத்திட்டு எரியா என்ன ஆகும்?

vijay nelson anirudh sunpictures beast thalapathyvijay thiraitheepidikum
By Jai Apr 13, 2022 01:55 AM GMT
Report

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் இன்று ரிலீஸாகியுள்ள படம் பீஸ்ட். பல எதிர்ப்பார்ப்புகளுடன் உலகளவில் 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஒளிப்பரப்பாகி வருகிறது. ரசிகர்கள் நள்ளிரவு முதலிலே தியேட்டரில் திரண்டு பீஸ்ட் படத்தினை கொண்டாடி வருகிறார்.

இன்று காலை முதல் நாள் முதல் காட்சியாக 4 மணிக்கு ஒளிப்பரப்பு செய்யபட்டுள்ளது. ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வரும் சூழலில் சில ரசிகர்கள் தியேட்டருக்குள்ளே வெடிகளை வெடித்து கொண்டாடியும் வருகிறார்கள்.

சிலர் இதனை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கியும் வருகிறார். படத்தில் திரை தீப்பிடிக்கும் வெடி வெடிக்கும் என்று அனிரூத் இசையில் ஒரு பாடல் வெளியானது. இப்பாடலை கலாய்க்கும் வண்ணம் தியேட்டர்ல வெடி வெடிச்சா தீப்பிடிக்காம என்ன ஆகும் என்று பலர் கலாய்த்து புகைப்படங்களை வெளியிட்டும் கருத்துக்களை கூறியும் வருகிறார்கள்.