ஹாலிவுட் வரை சென்ற விஜய்யின் பீஸ்ட்.. நெல்சனை வெச்சு செய்யும் நெட்டின்சன்கள்..

Vijay Beast Nelson Dilipkumar Pooja Hegde
By Edward Sep 17, 2022 09:30 AM GMT
Edward

Edward

Report

நடிகை நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தின் ஹிட்டை கொடுத்தார். டாக்டர் படம் வெளியாகும் முன்பே நடிகர் விக்ஜய்யின் பீஸ்ட் படத்தினை இயக்க கமிட்டாகினார். அதன்பின் பீஸ்ட் படம் இயக்கி முடித்து வெளியாகியது.

இப்படத்தின் பிரமோஷனுக்காக நெல்சன் பல பேட்டிகளில் கலந்து கொண்டு ஓவராக பேசியது பீஸ்ட் படம் ஏமாற்றத்தை கொடுத்தது. படத்தின் பல காட்சியில் லாஜிக் மீரல்கள் அதிகளவில் இருந்ததை இணையத்தில் நெட்டிசன்கள் உள்ளிட்டவர்கள் கலாய்த்து வந்தனர்.

அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு கூட பாலிவுட் ஊடகங்கள், சமுகவலைத்தளங்கள் கூட பீஸ்ட் படத்தில் சொதப்பிய காட்சிகளை கலாய்த்து ட்ரோல் செய்து வந்தனர்.

இந்நிலையில் ஹாலிவுட் அளவிற்கு சென்ற பீஸ்ட் படம் தற்போது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. வெளிநாட்டை சேர்ந்த சமுக வலைதளம் ஒன்று இந்த காட்சியை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல இருக்கிறது என்று ஒரு மீம் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.