டிரான்ஸ் குயின் போட்டி.. பட்டத்தை தட்டித்தூக்கிய சினேகா லுக்கில் இருக்கும் திருங்கை ஹேமா...
Transgender
Dindigul
Beauty
By Jai
மிஸ் திண்டுக்கல் டிரான்ஸ் குயின்
பெண்களை போல் தற்போது திருநங்கைளும் பல இடங்கள் சாதித்து வருகிறார்கள். அந்தவகையில் திண்டுக்கல்லில் சமீபத்தில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி நடைபெற்றுள்ளது.

பல திருநங்கைகள் போட்டிப்போட்ட நிலையில் தேனியை சேர்ந்த ஹேமா என்பவர் முதலிடம் பிடித்து அசத்தி இருக்கிறார். அவருக்கு மிஸ் திண்டுக்கல் டிரான்ஸ் குயின் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
அவரை அடுத்து தேனியை சேர்ந்த சுருதி, தீக்ஷனா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர். நடை, உடை பொது அறிவு வினா- விடை ஆகியவற்றின் அடைப்படையில் ஹேமா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அவரின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகிய நிலையில் பார்க்க அப்படியே நடிகை சினேகாவை போல் இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
