என்னுடைய மனதில் அந்த நடிகர் தான் இருக்கிறார்!! நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ஓபன் டாக்..
தெலுங்கு சினிமாவில், தற்போது வளந்து வரும் நடிகையாக இருப்பவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் ரவி தேஜா நடிக்கும் மிஸ்டர் பச்சன் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.
சமீபத்தில் இவர் நடித்த மிஸ்டர் பச்சன் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த பாடல்களில் பாக்யஸ்ரீ போர்ஸ் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்த படம் வரும் ஆகஸ்ட்- 15 தேதி வெளிவர இருக்கும் நிலையில், இந்த படத்திற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அப்போது பேசிய நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் ஷாருக்கான் என்றும், அவர் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றும், அவர் ரொமான்ஸ்க்கு பெயர் போனவர் என்றும் கூறியுள்ளார். மேலும், என் மனதில் ஷாருக்கான் மட்டும் தான் இருக்கிறார் எனவும் வேறு யாருக்கும் இடமில்லை எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் அவர் கடந்த ஆண்டு வெளி வந்த பிளாக்பஸ்டர் படம் ஆன கதார் 2 என்ற படத்திற்கான ஆடிஷனில் கலந்து கொண்டதை பற்றியும் பேசியுள்ளார்.