ஷூட்டிங் ஸ்பாட்டில் இளம் நடிகரின் சீண்டல்!! அந்த இடத்திலேயே அழுத 57 வயது சிவகார்த்திகேயன் பட நடிகை
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த டாப் நடிகைகளில் ஒருவர் நடிகை பானுப்ரியா. தன்னுடைய காந்தக்கண்ணால் 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்தவர் தற்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கிறார். தனுஷின் 3 படத்தில் அவருக்கு அம்மாவா நடித்த பானுப்ரியா, கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்யராஜின் மனைவியாகவும், பொங்கல் அன்று வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் அம்மா ரோலில் சில காட்சியில் நடித்தார்.
இதனை தொடர்ந்து பானுபிரியா பற்றிய சில தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில், பத்திரிக்கையாளர் ஒருவர் பானுபிரியா பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். பானுபிரியாவுக்கு நினைவுத்திறன் குறைந்துவிட்ட செய்தி ஊடகங்கள்ல் பரவ ஆரம்பித்தது. சினிமாவை சார்ந்த யாரும் பானு பிரியாவை பார்க்கவும் விசாரிக்கவும் வரவில்லை.
ஆனால் மும்பையில் இருந்த நடிகை ராதா, ஹைதராபாத்தில் இருந்து பானுபிரியாவை பார்க்க நேரில் சென்று நலம் விசாரித்திருக்கிறார். உடனே கிளம்பு மும்பைக்கு, மருத்துவ சிகிச்சை அளித்து சரி செய்துவிடலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் பானுபிரியா அதற்கு மறுத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார் அந்த பத்திரிக்கையாளர்.
மேலும், ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்டபோது கேமரா முன் சில வசனங்களை பேசும் போது வசனங்கள் ஞாபத்தில் நிற்காமல், பல முறை டேக் எடுத்திருக்கிறார். அப்படத்தில் நடித்த இளம் நடிகர் ஒருவர், ஒன்னு டயலாக்கை மாற்று இல்லைன்னா அவங்கள மாத்து என்று கோபமாக இயக்குனரிடம் கூறியிருக்கிறார். இளம் நடிகர் அப்படி கூறியதை நினைத்து அந்த இடத்திலேயே அழுதிருக்கிறார் பானு பிரியா.