வெக்கமே இல்லாமல் காப்பியடிக்கும் பாரதி கண்ணம்மா சீரியல்.. அதுவும் ஜீ தமிழ் சீரியலை பார்த்து
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலை எப்போது தான் முடிப்பீங்க என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள்.
அதன்படி இன்னும் சில நாட்களில் இந்த சீரியல் முடிவுக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியல் காப்பி என்று கூறி சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. அது என்னவென்றால் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த பூவே சீரியலும் பி=பாரதி கண்ணம்மா சீரியலும் ஒரே கதையாக இருக்கிறதே என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
பாரதிக்கு கண்ணம்மா பற்றிய உண்மை என்ன என்பது டிஎன்ஏ ரிசல்ட் மூலமாக தெரியவந்துவிட்டது. இதன்பின், கண்ணம்மாவுடன் சேர வரும் பாரதி உடன் வர முடியாது என கூறிவிட்டு இரண்டு மகள்கள் உடன் தனியாகவே சென்றுவிடுகிறார். கண்ணம்மாவை எப்படியாவது அழைத்துவந்துவிட வேண்டும் என பாரதி குடும்பத்திடம் கூறுகிறார்.
அதே நேரத்தில் கண்ணம்மா மற்றொரு திட்டம் போடுகிறார். யாரும் கண்டுபிடிக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிடலாம் என கண்ணம்மா கூற, மகள்களும் அதை ஒப்புக்கொள்கின்றனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த பூவே கதை போல மாறுகிறது பாரதி கண்ணம்மா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.