பாரதி மகள் ஹேமாவிற்கு டப்பிங் கொடுப்பது இந்த நடிகரின் மகளா? வைரலாகும் புகைப்படம்..
தமிழ் தொலைக்காட்சியில் சமீபகாலமாக இல்லத்தரசிகளை தாண்டி இளசுகளையும் கவர்ந்த சீரியல் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த பாரதி கண்ணம்மா, பாரதியின் சந்தேகத்தால் கதையே மாறிவிட்டது. தற்போது இரட்டை குழந்தை பிறந்து 8 வருடத்திற்கு பிறகு நடக்கும் கதையை ஒளிப்பரப்பாகி கொண்டுவருகிறது.
பாரதியுடன் ஹேமாவுன் கண்ணம்மாவுடன் லட்சுமியும் வளர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் காட்சிகளில் பாரதி கண்ணம்மாவின் வீட்டிற்கு வருவது போல அமைந்து வருவது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை தந்துள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில், பாரதியின் மகள் ஹேமாவிற்கு யார் டப்பிங் கொடுக்கிறார்கள் என்று வெளியாகியுள்ளது.
பிரபல சீரியல் நடிகர் ஷாமின் மகளான ரக்ஷனா தான் ஹேமாவிற்கு குரல் கொடுத்து வருகிறாராம். ஏற்கனவே ஹீரோ படத்தில் மால்தோ பாடலையும் இவர்தான் பாடியுள்ளார். மேலும் சுட்டி குட்டி சீரியலில் ஒருசில நிகழ்ச்சிக்கும் இவர் டப்பிங் செய்து வருகிறாராம்.
