மணிவண்ணன், பாக்யராஜ் இல்லன்னா பாரதிராஜா கிடையாதா? உண்மையை உடைத்த பிரபல நடிகர்..
தமிழ் திரையுலகில் இயக்குனர் ஜாம்பவானாக திகழ்ந்து வந்தவர் பாரதிராஜா. இவர் அறிமுகப்படுத்திய பல நடிகர் நடிகைகள் இன்று மூத்த நடிகைகளாகவும் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளாக திகழ்ந்து வந்தனர்.
அதேபோல் அவருடன் உதவி இருக்குனராக பணியாற்றி பாரதிராஜா சார்பட்டாவில் இருந்து உருவாகியவர்கள் கே பாக்யராஜ், மணிவண்ணன் உள்ளிட்ட பலராவார்கள்.
அப்படி பாக்யராஜ் மற்றும் மணிவண்ணன் இல்லை என்றால் பாரதிராஜா உச்சத்தை தொட்டு இருக்க மாட்டார் என்று இயக்குனர் சித்ரா லட்சுமனன் அவரது யூடியூப் சேனலில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமனன், இந்த விமர்சனத்தை நான் தரம் தாழ்ந்த விமர்சனமாக கருதுகிறேன். திரையுலகில் எப்போது ஒரு இயக்குனர் புகழ் பெற்றுவிட்டால் இதுபோன்ற விமர்சனங்கள் எழதான் செய்யும்.
அப்படி பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் பாக்யராஜ் கடைசி உதவி இயக்குனராக தான் சேர்ந்தார். அதன்பின் பாரதிராஜா இயக்கிய படத்தில் பாக்யராஜின் பங்களிப்பு இருந்ததே தவிர அதன் வெற்றிக்கு பாக்யராஜ் சொந்தம் கொண்டாட முடியாது.
மேலும் பாக்யராஜ், மணிவண்ணன், பாரதிராஜாவை விட்டு விலகிய பின்னும் அவர் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.