வாய்ப்பு கேட்டு கெஞ்சிய அப்பா!! தூக்கி எறிந்த இயக்குனரை இன்றுவரை மறக்காத விஜய்..

Vijay Gossip Today Bharathiraja S. A. Chandrasekhar
By Edward Jun 01, 2023 11:16 AM GMT
Edward

Edward

in Gossip
Report

தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் விஜய்.

விஜய்யின் இந்த உச்சத்திற்கு மிகமுக்கிய காரணம் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான். மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தியதில் இருந்து விஜய்யின் வளர்ச்சியில் தன் பங்கினை ஆற்றி வந்துள்ளார்.

அப்படி விஜய்யை அறிமுகம் செய்ய முதல் சில இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார் எஸ் ஏ சி. ஆனால் முன்னணி இயக்குனர்கள் விஜய்யை ஒதுக்கி வந்துள்ளனர்.

இந்த விசயத்தை ஒரு மேடையில், பாரதிராஜாவிடம் என் மகன் உங்கள் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறான் என்று கூறி வாய்ப்பு கேட்டுள்ளார் சந்திரசேகர்.

ஆனால் நீயே ஒரு இயக்குனர் நீயே அவனை இயக்கு என்று ஒதுக்கி இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் இயக்குனர் பாரதிராஜா, என்னவோ தோணவில்லை இந்த பையன் வேண்டும்ன்னு அனுப்பி வைத்துவிட்டேன்.

இப்போது நம்பர் ஒன் ஹீரோ. இதுபற்றி நான் விஜய்யிடமும் கூறிய போது, நீங்கள் ரிஜெக்ட் பண்ணியதை மறக்கவில்லை என்று கூறுவான் விஜய் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.