பொய் கூறிய குடும்பத்தினர்! வீட்டிலேயே மது அருந்திய பாரதியின் அடுத்த ப்ளான் என்ன?

bharathikannamma barathikannamma barathi
By Edward May 25, 2021 09:45 AM GMT
Report

தொலைக்காட்சி தொடர்களில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாத சீரியலாக இருப்பது பிரபல தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா சீரியல் தான். ஆரம்பத்தில் பாசமாக இருந்த பாரதி, கண்ணம்மா கர்ப்பமானதை வெண்பாவின் சதியால் சந்தேகத்துடன் பார்த்து பின் பார்த்தாலே கோபமடைகிறார்.

அப்படி கதை கூட்டிச்சென்ற இயக்குநர் திடீரென இரு மகள்களை வைத்து 6 வருடங்களுக்கு பிறகு கதை செல்வது போன்று காமித்து வருகிறார். இதில் சமீபத்திய எபிசோட்டில் ஹேமா, லட்சுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பல திருப்பங்கள் நடைபெற்றது. அதில் ஒன்று வெண்பாவின் சமையல்காரப்பெண் கண்ணம்மாவிடம் அடிவாங்குவதும், அதை வெண்பாவிடம் கூறும் காட்சிகள் சிரிக்கவைத்தது.

இதையடுத்து பாரதிக்கு சமையல் அம்மா யார் என்று ஹேமா மூலம் தெரிந்துவிட்டது. அதனால், பாரதி நன்றாக குடித்துவிட்டு ஹேமா சமையல் அம்மாவைப் பற்றி சொன்னதையெல்லாம் நினைத்துப் பார்கிறான். கண்ணம்மா சமையல் அம்மாவாக அவனது வீட்டில் வந்து சமைத்தது பற்றியும், அப்போது மொத்த குடும்பமும் சேர்ந்து அவனிடம் பொய் சொன்னதையும் நினைத்து கோபத்தில் குமுறுகிறான்.

இதனால் மது குடித்து கொண்டிப்பதை பாரதியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களிடமும் பாரது தன் கோபத்தை வெளிப்படுத்தி வரும் பிரமோ வீடியோவில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பாரதியின் அடுத்த திட்டம் என்ன என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகிறார்கள்.

ஆனால், இந்த வாரம் ஒரு சில நாட்களே சீரியல்கள் ஒளிப்பரப்பு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் வெள்ளியன்று எந்த விஜய் டிவி சீரியல்களும் ஒளிப்பரப்பாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.