அட்ஜெஸ்மெண்ட் பிரச்சனை!! வெளிப்படையாக பேசிய ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ..
பவானிஸ்ரீ
சினிமாவில் நடக்கும் பாலியல் தொந்தரவு மற்றும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து நடிகைகள் பலர் வெளிப்படையாக பகிர்ந்து வரும் நிலையில், ஜிவி பிரகாஷின் தங்கையும் நடிகையுமான பவானிஸ்ரீ இதுகுறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதில், சினிமாவில் இதுவரை அட்ஜெஸ்மெண்ட் என்ற ஒன்றை நான் சந்தித்தது இல்லை. ஆனால் பெண்களின் பயமும், தயக்கமும் தான், சிலர் இங்கு தவறு செய்யக்காரணம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மீ டூ போன்ற பல விஷ்யாங்கள் இருக்கிறது.
ஒருவர் உங்களை தவறாக அணுகினால் அதை வெளியில் கொண்டு வந்தாலே போதும். மற்றவர்களுக்கு அது நடக்காமல் தடுத்துவிட முடியும். எனவே இதுபோன்ற விஷயங்களில் பெண்கள் பயப்பட வேண்டாம். இப்போது நல்ல கதைகள் தான் வெற்றி பெறுகிறது.
கமர்ஷியல் படங்களில் கூட கதைகள் இருக்க வேண்டும். கிளாமரை மட்டுமே நம்பி எந்த கதையும் இங்கு நிற்பதில்லை என்று பவானிஸ்ரீ தெரிவித்துள்ளார்.