3 முறை கூப்பிட்டாங்க மறுத்தேன்! ஆசை காட்டியவர்களுக்கு பதிலடி கொடுத்த 42 வயது விஜய்பட நடிகை பூமிகா!

vijay bollywood biggboss15 bhumikachawla bathri
1 வருடம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் விஜய்யின் பத்ரி படத்தின் மூலம் அறிமுகமாகி பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து பிரபலமானவர் நடிகை பூமிகா சாவ்லா. இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் என நடித்து பிரபலமான பூமிகா 2007ல் பாரத் தாகூர் என்பவரை திருமணமாகி செட்டிலானார்.

இதையடுத்து ஒருசில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். கதாநாயகியாக சில படங்களில் பேசப்பட்டு வருவதால் உடல் எடையை குறைத்து பழைய அழகிற்கு மாறி வருகிறார் பூமிகா. சமீபத்தில் க்ளாமர் மற்றும் நீச்சல் ஆடை புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

இதன் பலனாக இந்தி பிக்பாஸ் 15 வது சீசனில் கலந்து கொள்ள பேச்சு வார்த்தை நடத்தியதாக இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார். அதில், பிக் பாஸ் 15 ஆவது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுங்கள் அதன்மூலம் உங்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என பிரபலம் ஒருவர் தொடர்ந்து கூறி வந்துள்ளார்.

அதற்கு பூமிகா, இது உண்மை இல்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூப்பிடவில்லை. அப்படியிருந்தாலும் நான் ஏற்கமாட்டேன். ஆனால், எனக்கு 1,2,3 மற்றும் அதன்பிறகு சில நேரங்களில் பங்கேற்க கேட்டு வந்தனர். நான் செல்ல மறுத்துவிட்டேன்.

அதை ஏற்கவும் மாட்டேன். நான் பிரபல நடிகையாக இருந்தாலும் என்னை பொருத்தவரை கேமரா முன் நடிப்பதுதான் என்னுடைய வேலை தவிர கேமரா முன் 24/7 நேரமும் வாழ்வது என்னுடைய வேலை இல்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.