பிக்பாஸ் 18ல் ஸ்ருதிகாவுக்கு நடந்த அநீதி!! எவிக்ட்டாகி வாங்கிய சம்பளம் இவ்வளவுதானாம்...
பிக்பாஸ் 18
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 ஒரு பக்கம் இறுதி கட்டத்தை நெருங்குவதை போன்று மற்றொரு பக்கம் இந்தி பிக்பாஸ் சீசன் 18ம் விரைவில் இறுதி கட்டத்தையும் நெருங்கியுள்ளது.
அப்படி இந்தி பிக்பாஸ் 18ல் ஆரம்பத்தில் இருந்தே கலக்கி வந்தவர் தான் குக் வித் கோமாளி புகழ் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். 90 நாட்கள் வரை பிக்பாஸ் 18 வீட்டில் தன்னுடைய ஸ்டைலில் விளையாடி வந்த ஸ்ருதிகா, தற்போது எவிக்ட்டாகி வெளியேறி இருக்கிறார்.
ஸ்ருதிகா எவிக்ட்
இதற்கு காரணம் ஸ்ருத்திகாவுடன் நண்பர்களாக இருந்த சிலருடைய சதியால் இவர் கடைசி வாரத்தில் நாமினேஷனுக்காக வந்தார். கடந்தவாரம் ஒரு டாஸ்க்கில் மூன்று அணிகளாக பிரிந்து எலிமினேஷனுக்கான நாமினேஷன் செய்யவேண்டும். அப்படி நெருங்கிய நண்பர்களாக இருந்த சும் மற்றும் கிரணுக்காகவே ஸ்ருத்திகா நாமினேஷனுக்கு வந்தார்.
ஆனால் அவர்கள் அப்படி நினைக்காமல் இப்படி நடந்து கொண்டனர். ஸ்ருதிகா 94 நாட்களுக்கு பின் பிக்பாஸ் 18ல் இருந்து வெளியேறியிருக்கிறார் ஸ்ருதிகா. அந்தவகையில் பிக்பாஸ் 18ல் ஒரு வாரத்திற்கு ரூ- 75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை வாங்கி வந்த ஸ்ருதிகா, ரூ. 6 முதல் 8 லட்சம் வரை சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.