விஜய் முகம் பதித்த டிசர்ட்.. தீவிர தளபதி ரசிகைன்னு நிரூபித்த அஜித் பட நடிகை அபிராமி..

Abhirami Bigg Boss
By Edward Sep 21, 2022 03:30 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனம் செலுத்தியவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். மாடலிங் துறையில் இருந்து வந்த அபிராமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அந்த படம் திரையில் வெளியாக அபிராமிக்கும் மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் மக்கள் ஆதரவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெற்றாரோ இல்லையோ நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பெற்றார்.

அதன்பின் ஒருசில படங்கள் ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த அபிராமி இந்த ஆண்டு சிம்புவால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, குடும்பபாங்கான முறையில் ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் வீட்டில் தனிமையில் இருக்கும் போது எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டார். தற்போது விஜய் முகம் பதிந்த டிசர்ட்டை அணிந்து லோ ஆங்கிள் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Gallery