குளோசப்பில் லைவ் வீடியோ!! இரவு பார்ட்டி வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் அபிராமி!!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனம் செலுத்தியவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். மாடலிங் துறையில் இருந்து வந்த அபிராமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அந்த படம் திரையில் வெளியாக அபிராமிக்கும் மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் மக்கள் ஆதரவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெற்றாரோ இல்லையோ நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பெற்றார்.
அதன்பின் ஒருசில படங்கள் ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த அபிராமி இந்த ஆண்டு சிம்புவால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி தனிமையில் தன் வீட்டில் இருக்கும் புகைப்படங்களை அப்படியே பகிர்ந்து வருவார். தற்போது இரவு பார்ட்டியில் லைட்டிங் வீடியோவை வெளியிட்டுள்ளார்.