நோ மீன்ஸ் நோ-லாம் எங்க போச்சு!! ஆணவத்தில் வாயை கொடுத்து பேசி மாட்டி முழிக்கும் அபிராமி
மாடல் நடிகையாக இருந்து பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை அபிராமி. இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிய அபிராமி பிக்பாஸ்-க்கு முன் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். தற்போது கடை திறப்பு டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஒருசில படங்களில் நடித்தும் வரும் அபிராமி வாய்க்கொடுத்து மாட்டிக்கொண்டதை நெட்டிசன்கள் வெச்சு செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் சமீபகாலமாக பேசுபொருளாக மாறியிருப்பது கலாசேத்திரா கல்லூரியில் பேராசிரியர்கள் நான்கு மாணவிகளை தவறாக அணுகியது தான். இதை எதிர்த்து கலாசேத்திரா மாணிவிகள் போராட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்தனர்.
இதனால் ஒரு பேராசிரியல் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டும் வருகிறார். இந்நிலையில் அந்த கல்லூரியின் முன்னாள் மாணவியும் நடிகையுமாக இருக்கும் அபிராமி, கல்லூரிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.
அப்படி எந்த பிரச்சனையும் நடக்கவில்லை என்றும் கலாசேத்திரா மாணவிகளை பலிகடாவாக ஆக்கப்படுகிறார்கள் என்று அபிராமி சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், ரொம்பவும் மரியாதை இல்லாமல் ஆணவத்தில் ஆடியபடி பேசியிருக்கிறார் அபிராமி.
மேலும் பத்திரிக்கையாளர்களை அவமதித்து அவர்களையே கேள்வி கேட்டிருக்கிறார். அதன்பின் பத்திரிக்கையாளர்கள் கண்டித்ததால் அப்படியே அமைதியாகிவிட்டார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு சங்கி சங்கி என்று நெட்டிசன்களால் அபிராமி கலாய்க்கப்பட்டு வருகிறார்.
என்ன திமிரு... என்ன ஆணவம் பாருங்க... pic.twitter.com/fQHqRQPuH3
— U2 Brutus (@U2Brutus_off) April 7, 2023