காதலியுடன் ஓவர் ரொமான்ஸ்!! பிக்பாஸ் அருணுடன் எடுத்த வீடியோவை பகிர்ந்து ஓட்டு கேட்கும் விஜே அர்ச்சனா
அர்ச்சனா
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றி மிகப்பெரிய ஆதவரை பெற்றவர் சீரியல் நடிகை அர்ச்சனா. தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அர்ச்சனா, பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்ட அருண் பிரசாத்துடன் காதலில் இருப்பதை ஃப்ரீஸ் டாக்கில் உள்ளே சென்று அதை உறுதி செய்தார்.
இதனைதொடர்ந்து அருண் விசயத்தில் தன்னை பலரும் நெகட்டிவாக பேசினாலும் அதை கண்டுக்கொள்ளாமல் அவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அர்ச்சனா.
அருண் பிரசாத்
இந்நிலையில் அருண் பிரசாத், தனக்கு முத்தம் கொடுப்பதையும் இருவரும் நீர்வீழ்ச்சியில் ஆட்டம் போடுவதுமான வீடியோவை அர்ச்சனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அருண் இல்லாமல் நாட்கள் மிகவும் கடினமாக இருப்பதாலும் ஆனாலும் சமாளித்துக் கொண்டிருப்பதாகவும், சில தினங்கள் மிகவும் கனமான உணர்வை கொடுப்பதாகவும் தன்னுடைய இதயம் அதை உணர்வதாகவும் கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 8 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தன் காதலர் அருண் பிரசாத்திற்காக கடைசியில் ஓட்டு கேட்டுள்ளாரே என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.