நீங்களா தலைவர்? நீங்கெல்லாம் என்ன மனுஷன்!! விஜய்யை மோசமாக கேள்விகேட்ட பிக்பாஸ் பிரபலம்
விஜய்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை ஆற்றியபோது கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. விஜய்யை பலரும் விமர்சித்தும் கண்டித்தும், கைது செய்ய வேண்டும் என்றும் பலரும் தங்களின் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.
அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்த சீரியல் நடிகர் அசிம், இதுகுறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
நீங்கெல்லாம் என்ன மனுஷன்
அதில், உங்கள பாக்க வந்த கூட்டம் உங்க கண்ணு முன்னாடி மூச்சி முட்டி நின்னத பாத்தும் ஒன்னும் பண்ணல, ஏர்போர்ட்ல நிருபர் கேள்வி கேக்குறாங்க, அதகூட காதுல வாங்காம புறமுதுகு காட்டிட்டு ஓடுறீங்க. நீங்கெல்லாம் என்ன தலைவர்? அட, தலைவர விடுங்க, நீங்கெல்லாம் என்ன மனுஷன்.
அத்தனை பேர் பத்தி எல்லாம் கவலைப்படாம சென்னை வந்துட்டு நாலு நாள் கழிச்சு வீடியோ போடுறீங்க. இதையே எதிர்கொள்ளாத நீங்க, CM-ஆகலாம்னு பகல் கனவு கண்டுட்டு இருக்கீங்களே.
அப்படியே நீங்க CM ஆனாலும் இந்த மக்களுக்கு என்ன பண்ணுவீங்க, ஒன்னும் பண்ண மாட்டீங்க என்று விமர்சித்து பேசியிருக்கிறார் பிக்பாஸ் பிரபலம் அசிம்.