19 வயசுல தயாரிப்பாளர் அவதாரம்!! வனிதா மகள் ஜோவிகாவின் 20வது பர்த்டே..
வனிதா மகள் ஜோவிகா
விஜயகுமார் - மஞ்சுளாவின் மகள் வனிதா, ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளையும் பெற்றெடுத்தார். அதன்பின் அவரை விவாகரத்து சொத்து பிரச்சனையை பெற்றோர்களிடம் போட்டு பிரிந்தார்.
ஒரு கட்டத்தில் மஞ்சுளா, வனிதாவை என் மகளே இல்லை என்று சொல்லி வீட்டைவிட்டு அனுப்பி வைத்தார். பின் வனிதா, ஆனந்த் என்பவரை திருமணம் செய்து ஜெயினிதா என்ற மகளை பெற்று கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார்.
பின் தனியாக வாழ்ந்து வந்த வனிதா, பல சர்ச்சைகளில் சிக்கி பின் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பின் மகள் ஜோவிகா வளர்ந்ததும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்து பிரபலப்படுத்தினார்.
20வது பர்த்டே
வனிதா, ராபர்ட் மாஸ்டரை வைத்து மிஸ்சஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை தயாரித்தார் ஜோவிகா. 19 வயதில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த ஜோவிகாவிற்கு சில நாட்களுக்கு முன் 20 வயதாகியுள்ளது.
மகளின் பிறந்தநாளை வனிதா தன் குடும்பத்துடன் கொண்டாடினார். பர்த்டே பார்ட்டியில் எடுத்த க்யூட் புகைப்படங்களையும், அவுட்டிங் சென்று கொண்டாடிய புகைப்படங்கள், வீடியோவையும் ஜோவிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




