எங்க போனாலும் இதான் கேட்பாங்க.. அப்போ லாட்ஜில் தங்கினேன்!! பிக்பாஸ் 6 ஜனனி..

Bigg Boss Janany Tamil Actress Leo
By Edward 4 days ago
Report

பிக்பாஸ் 6 ஜனனி

இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவராக இருப்பவர் ஜனனி. பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜனனி, பிக்ப்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்தார்.

பிக்பாஸ் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து விஜய்யின் லியோ படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். ஒருசில படங்களில் நடித்து வரும் ஜனனி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

எங்க போனாலும் இதான் கேட்பாங்க.. அப்போ லாட்ஜில் தங்கினேன்!! பிக்பாஸ் 6 ஜனனி.. | Bigg Boss Fame Janani Opens Up About Struggles

இதான் கேட்பாங்க

அதில், இலங்கையில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சென்னை வந்தபோது இங்கே வீடு எடுத்து தங்கவில்லை. ரூம் எடுத்து லாட்ஜில் தங்கி இருந்தேன். பின் பிக்பாஸ் போய்விட்டு முடிந்ததும் ஊருக்கு கிளம்பலாம் என்று இருந்தேன். அந்த நேரத்தில் லியோ வாய்ப்பு கிடைத்தது. அதற்காக காஷ்மீர் சூட்டிங் போய்விட்டோம். அதனால் கொஞ்சம் பிரச்சனை இல்லாமல் இருந்தேன். பின் சென்னைக்கு வந்ததும் வீடு இல்லாமல் கஷ்டப்பட்டேன். வீடு தேடி அப்போது அலைந்தபோது பல இடங்களில் வீடு கிடைக்கவில்லை.

ரசிகர்கள் என்னிடம் நீங்கள் பிக்பாஸ் ஜனனி தானே என்று கேட்கிறார்கள். இல்லையென்றால் நீங்கள் லியோ படத்தில் நடித்தீர்கள் என்று என்னை அடையாளப்படுத்துகிறார்கள். இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இப்போ தமிழகத்தில் எனக்குன்னு ஒரு அடையாளம் உருவாகியிருக்கிறது.

எங்க போனாலும் இதான் கேட்பாங்க.. அப்போ லாட்ஜில் தங்கினேன்!! பிக்பாஸ் 6 ஜனனி.. | Bigg Boss Fame Janani Opens Up About Struggles

ஆரம்பத்தில் வீடு கிடைக்காமல் ரொம்பவும் கஷ்டபட்டேன், இப்போது நான் நினைத்தது போல் ஒரு வீடு கிடைத்திருக்கு, சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறேன், தமிழ் மக்கள் கொடுத்த பாசமும் வரவேற்பும் தான் அதற்கு காரணம் என்று ஜனனி தெரிவித்திருக்கிறார்.