கைது செய்யப்பட்ட பிக்பாஸ் தர்ஷன்!! வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை ரம்யா...

Bigg Boss Serials Actors Tamil Actress
By Edward Apr 09, 2025 02:30 AM GMT
Report

தர்ஷன்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பிரபலமானவர் ஸ்ரீலங்கா தமிழர் தர்ஷன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஒருசில படங்களில் நடித்து தர்ஷன், சமீபகாலமாக பேசுபொருளாக மாறியிருக்க்றார். கார் பார்க்கிங் விஷயத்தில் நீதிபதி மகனுடன் ஏற்பட்ட பிரச்சனையால் கைது செய்யப்பட்டார் தர்ஷன்.

கைது செய்யப்பட்ட பிக்பாஸ் தர்ஷன்!! வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை ரம்யா... | Bigg Boss Fame Tharshan Jailed Actress Ramya Video

சீரியல் நடிகை ரம்யா

தற்போது தர்ஷன் பற்றி அவருடன் நடித்த நடிகை ரம்யா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், தர்ஷன் கைது செய்யப்பட்ட செய்தியை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். பெண்களுக்கு தர்ஷன் அவ்வளவு மரியாதை கொடுப்பார், அதை நான் பார்த்திருக்கிறேன்.

அவருடன் நடித்தபோது முதலில் அவன் அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறாரே நம்மிடம் எப்படி பேசுவார் என்று யோசித்தேன். ஆனால் பேசிய முதல் நாளில் எல்லோரிடமும் நன்றாக பேசத்துவங்கினான். என்னிடம் மட்டுமல்ல சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடமும் ஜாலியாக பேசினான்.

கைது செய்யப்பட்ட பிக்பாஸ் தர்ஷன்!! வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை ரம்யா... | Bigg Boss Fame Tharshan Jailed Actress Ramya Video

என்னிடம் சொந்த தம்பி போல் தான் நடந்து கொண்டான். ஒருவர் மரியாதையோடும் பாசத்தோடும் பேசுவதற்கு பொய்யாக பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தர்ஷன் எல்லோரிடமும் மரியாதையோடு பேசுவான் என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார் நடிகை ரம்யா.