கிட்னி திருட்டில் ஜூலிக்கு தொடர்பா!! பாதிக்கப்பட்டவர்களை மிரட்டினாரா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..

Vijay Gossip Today Maria Juliana
By Edward Mar 04, 2026 01:45 PM GMT
Report

பிக்பாஸ் ஜூலி

ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி கடந்த 2017ல் தமிழ் நாட்டில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அப்போது சென்னை மெரீனாவில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமானவர் தான் மரிய ஜூலியானா. ஜூலி என்றழைக்கப்படும் இவர் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு பலரது கவனத்தை ஈர்த்தார். ஆனால் ஒருசில செயல்களில் ஈடுபட்டு பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.

கிட்னி திருட்டில் ஜூலிக்கு தொடர்பா!! பாதிக்கப்பட்டவர்களை மிரட்டினாரா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.. | Bigg Boss Julie Being Linked To Kidney Theft Case

அதன்பின் சில ஆண்டுகளுக்கு பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து டாப் 5 இடத்தினை பிடித்தார். தற்போது ஒருசில படங்களில் நடித்து ஜூலி, சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து தவெக தலைவர் விஜய், ஜல்லிக்கட்டு பற்றி சொன்ன குட்டி கதையை கண்டித்து வீடியோவை வெளியிட்டார். அதற்கு விஜய் ஆதரவாளர்கள் ஜூலியை மோசமாக திட்டி வந்தனர்.

கிட்னி திருட்டில் ஜூலி

இந்நிலையில் பிக்பாஸ் ஜூலி பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஜூலி கிட்னி திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் அவரது கணவரும் சேர்ந்து ஒருத்தர் மட்டுமல்ல பல பேரிடம் கிட்னி திருட்டில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்பட்டு வந்தது. ஆதாரம் வெளியிட்ட பாதிக்கப்பட்ட ஒரு நபர் மற்றும் அவர் குடும்பத்தை போன் செய்து ஜூலி, இதுபற்றி யார் என்ன கேட்டாலும் தெரியாது என்று சொல்லிவிடு என்று மிரட்டியுள்ளாராம்.

இதில் ஜூலி, தோழி ஷர்மி, ஜூலியின் கணவர், இன்னும் சில மருத்துவமனை நிர்வாகத்தில் இருக்கும் சிலருடன் தொடர்பு வைத்துக்கொண்டு, யாருக்கு கிட்னி தேவையோ அவர்களிடம் பணத்தை வாங்கி, கிட்னி கொடுப்பவர்களுக்கு கொடுக்காமல் அதில் பல லட்சத்தை சுட்டியதாகவும் கூறப்படுகிறது. குறித்த நபர் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.