கொரோனா காலகட்டத்தில் விமானநிலையத்தில் காதலிக்கு முத்தம்! பிக்பாஸ் பிரபலம் செய்த செயல்..

lover rahulvaidya dishaparma biggboss14
By Jai May 10, 2021 02:45 PM GMT
Report

கொரோனா வைரஸ் தற்போது இரண்டாம் அலையை தாண்டி ஆபத்தை அதிகரித்து கொண்டிருக்கிறது. ஒரு நாள் பாதிப்பாக 4 லட்சத்தினை எட்டியுள்ள நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்களை அரசு அறிவித்து வருகிறது.

இந்நிலையில் பிரபலங்களும் நிலைமையை கருத்தில் கொண்டு படப்பிடிப்பை தவிர்த்தும் வருகிறார்கள். அதில் இந்தி பிக்பாஸ் 14வது சீசனில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தவர் தான் ராகுல் வைத்யா.

சில தினங்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் நடக்கவிருக்கும் ரியாலிட்டி ஷோவிற்காக செல்ல விமானநிலையத்திற்கு தான் காதலித்து வரும் தொலைக்காட்சி நடிகையும் மாடலுமான திஷா பர்மாவுடன் சென்றுள்ளார்.

தான் மட்டும் தென்னாப்பிரிக்காவிற்கு செல்ல இருப்பதால் விடைபெரும் போது காதலி திஷா பர்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தும் காதலை வெளிப்படுத்தினார். இதை பலர் வீடியோவும் புகைப்படமும் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வந்தனர்.