விபத்தில் மரணமடைந்த தந்தை! கண்ணீர்விட்டு கதறி அழுத பிக் பாஸ் ரியா.. வீடியோ இதோ

Bigg Boss Bigg Boss Tamil 8
By Karthick Raja Jun 17, 2025 02:31 AM GMT
Report

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களின் ஒருவர் ரியா. கடந்த பிக் பாஸ் 8ல் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த இவர் இரண்டு வாரங்கள் மட்டுமே வீட்டிற்குள் இருந்தார். அதன்பின் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறினார்.

விபத்தில் மரணமடைந்த தந்தை! கண்ணீர்விட்டு கதறி அழுத பிக் பாஸ் ரியா.. வீடியோ இதோ | Bigg Boss Riya Thiyagarajan Crying Video Viral

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது லேட்டஸ்ட் பதிவுகளை அதில் வெளியிடுவார். அந்த வகையில் தற்போது கண்ணீருடன் கதறி அழுது வீடியோ வெளியிட்டு இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இந்த வீடியோவில் தனது தந்தை குறித்து கண்ணீருடன் பேசியுள்ளார் ரியா, "எனக்கும் என் தந்தைக்கும் நிறைய சண்டை வந்து கொண்டு இருக்கும். அவரிடம் நான் பேசவே மாட்டேன். சண்டை போட்டுக்கொண்டே இருப்பேன். அவர் எங்கே போய் விட போகிறார் என குருட்டு நம்பிக்கையில் இருந்தேன். ஆனால், திடீரென ஒன்று நிகழ்ந்தது.

விபத்தில் மரணமடைந்த தந்தை! கண்ணீர்விட்டு கதறி அழுத பிக் பாஸ் ரியா.. வீடியோ இதோ | Bigg Boss Riya Thiyagarajan Crying Video Viral

விபத்தில் என் அப்பா எங்களுடன் இல்லாமல் போய்விட்டார். அதன் பின்தான் அவர் என் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பது புரிந்தது. என்ன பிரச்சனையாக இருந்தாலும் பெற்றோருடன் பேசாமல், பார்க்க போகாமல் இருக்காதீர்கள்" என கண்ணீர்விட்டு அழுது பேசியுள்ளார் பிக் பாஸ் ரியா. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.