கல்யாணத்தில் ஏற்படும் ஏழரையை பார்த்த கமல்! வெளியானது பிக்பாஸ் 5ன் முதல் பிரமோ வீடியோ..
தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாகி எப்போது ஆரம்பிக்க போகிறது என்று ரசிகர்களின் எதிப்பார்பாக இருந்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த 4 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி வருகிறது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரியவந்தது.
இதைதொடர்ந்து கமல் ஹாசன் பிக்பாஸ் 5ன் லோகோ வீடியோவை வெளியிட்டு வைரலாக்கினார். மேலும் போட்டியாளர்கள் யார் யார் தேர்வு செய்யப்பட்டனர் என்ற சந்தேகங்களை அதிகரிக்க தற்போது பிக்பாஸ் 5 சீசனின் பிரமோ வீடியோவை கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார்.
கல்யாண வீட்டினை மையமாக வைத்து அந்த பிரமோ வீடியோ உருவாகியுள்ளது. ஆயிரம் பொறுத்தம் பார்த்து நடத்தப்படும் கல்யாண வீட்டில் ஏற்படும் ஏழரைகளை காட்டிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறி வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்திl டிரெண்ட்டாகி வருகிறது.