பிக்பாஸ் 1 முதல் 7 சீசன் வரை!! அதிகம் விமர்சிக்கப்பட்டவர் யாரெல்லாம் தெரியுமா?

Oviya Bigg Boss Maria Juliana Pradeep Anthony Bigg Boss Tamil 8
By Edward Oct 07, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

விஜய் டிவியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி நேற்று துவங்கப்பட்ட நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 8. மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிலையில், கடந்த 1 முதல் 7 சீசன் வரை ஒளிப்பரப்பாகிய சீசன்களில் அதிகம் விமர்சிக்கப்பட்ட போட்டியாளர்கள் யார் யார்? என்றும் எதற்காக விமர்சிக்கப்பட்டார்கள் என்றும் இந்த பதிவில் பார்ப்போம்..

பிக்பாஸ் 1 முதல் 7 சீசன் வரை!! அதிகம் விமர்சிக்கப்பட்டவர் யாரெல்லாம் தெரியுமா? | Bigg Boss Tamil Controversy Contestant 1 7 Season

பிக்பாஸ் முதல் சீசனில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு பிரபலமாகியவர் நடிகை ஓவியா. ஆரவை காதலிப்பதாக கூறி பெரும் சர்ச்சையில் சிக்கி சில காரணங்களால் பாதியில் வெளியேறினார்.

  • முதல் சீசனில் வீட்டுக்குள் சாதியை மையப்படுத்தி சர்ச்சையான கருத்துக்களை பகிர்ந்து மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம். 56 நாட்களுக்கு பின் வெளியேற்றப்பட்டார்.
  • முதல் சீசனில், ஓவியா, காயத்ரியை தாண்டி மிகப்பெரிய விமர்சனத்திற்குள்ளானவர் தான் ஜூலி. ஓவியாவை பற்றி பேசி கமல் ஹாசன் வெளியிட்ட குறும்படத்தால் ஜூலியின் முகத்திரை வெட்டவெளிச்சத்து வந்தது. அது முதல் இன்றுவரை மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளர்களில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார் ஜூலி.
  • பிக்பாஸ் 2வது சீசனில் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தா, தன்னுடைய அடாவடித்தனத்தால் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து விமர்சிக்கப்பட்டார். ஆனால் கடைசி வரை வந்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.
  • சக பெண்களை மோசமாக விமர்சனம் செய்த மகத் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
  • பெண்களை மோசமாக பேசி சர்ச்சையில் சிக்கி வெளியேற்றப்பட்டவர் சரவணன்.
  • ஆரம்பத்தில் இருந்து பிக்பாஸ் 3 சீசனில் வெறுப்பை சம்பாதித்த மீரா மிதுன் சக ஆண் போட்டியாளர் தன் இடுப்பை பிடித்தார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
  • இதனால் அவர் மோசமாக விமர்சிக்கப்பட்டார். பிக்பாஸ் 3ல் காதல் சர்ச்சையில் சிக்கியதால் விமர்சிக்கப்பட்டார் நடிகர் கவின்.
  • சக போட்டியாளர்களால் ஒதுக்கப்பட்டதோடு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்ட்னி பெரியளவில் விமர்சிக்கப்பட்டார்.