கமல் இல்லாமல் நடக்கவுள்ள பிக்பாஸ் சீசன் 8!! இத்தனை பேரை தட்டித்தூக்கும் விஜய் டிவி..

Ashwin Bigg Boss Star Vijay
By Edward Aug 16, 2024 01:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். கடந்த 7 ஆண்டுகளாக 7 சீசனை கடந்து உலக நாயகன் கமல் ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. ஆவலுடன் ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தான் விலகியுள்ளேன் என்றும் இனிமேல் நான் இல்லை என்றும் கமல் ஹாசன் ஒரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அதிகாரப்பூர்வ தகவலை கூறியிருந்தார்.

கமல் இல்லாமல் நடக்கவுள்ள பிக்பாஸ் சீசன் 8!! இத்தனை பேரை தட்டித்தூக்கும் விஜய் டிவி.. | Bigg Boss Tamil Season 8 Participating Contestants

அவருக்கு பதில் யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதியை தான் கமிட் செய்திருக்கிறார்களாம். அவரை வைத்து பிரமோ ஷூட்டும் நடைபெறவுள்ளதாம். வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் லிஸ்ட் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில், பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த நடிகர் அருண் பிரசாத் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

கமல் இல்லாமல் நடக்கவுள்ள பிக்பாஸ் சீசன் 8!! இத்தனை பேரை தட்டித்தூக்கும் விஜய் டிவி.. | Bigg Boss Tamil Season 8 Participating Contestants

டிடிஎஃப் காதலியும் குக் வித் கோமாளி 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட ஷாலின் சோயா, குக் வித் கோமாளி நடிகர் அஸ்வின் குமார், சோசியல் மீடியா பிரபலம் அமலா ஷாஜி, சீரியல் நடிகை ஃபரீனா அசாத், விஜய் டிவி பிரபலம் KPY ராமர், காத்து மேல பாடலை பாடி பால் டப்பா, பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொள்ளவிருக்கிறார்களாம்.

இப்படியொரு லிஸ்ட் இணையத்தில் கசிந்து பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியில் வந்தால் தான் தெரியும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.