18 லட்சம் போச்சுன்னு அழுறியா!! அரோராவை கலாய்த்த கானா வினோத்..

Bigg boss 9 tamil Aurora Sinclair Gana Vinoth
By Edward Jan 14, 2026 08:30 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 9

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது கிராண்ட் ஃபினாலே-வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பணப்பெட்டியோடு கானா வினோத் வெளியேறியதை அடுத்து, பலரும் அவர் வெளியேறியதை நினைத்து புலம்பி வருகிறார்கள். இதனையடுத்து கடந்த வாரம் சான்ட்ரா எவிக்ட்டாகி வெளியேறினார்.

இதன்பின், வீட்டிற்குள், ஆதிரை, கனி, எஃப்ஜே, துஷார் போன்ற போட்டியாளர்கள் உள்ளே வர, இன்றைய 101வது நாள் பிரமோ வீடியோக்கள் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

18 லட்சம் போச்சுன்னு அழுறியா!! அரோராவை கலாய்த்த கானா வினோத்.. | Bigg Boss Tamil Season 9 Gana Vinoth Re Entry

கானா வினோத்

அதில், 18 லட்ச பணப்பெட்டியை எடுத்துச்சென்ற கானா வினோத் பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். சக பிக்பாஸ் 9 போட்டியாளர்களும் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இதனையடுத்து, அரோரா நான் தான் உன்னை அனுப்பிவிட்டேன் என்று அழுதுள்ளார். அதற்கு கானா வினோத், 18 லட்சம் போச்சுன்னு அழுறியா என்ன என்று கலாய்த்துள்ளார்.