பிக் பாஸ் வீட்டிற்குள் குக் வித் கோமாளி போட்டியார்கள்.. வைல்டு கார்டு என்ட்ரி
Bigg Boss
Bigg Boss Tamil 8
By Karthick Raja
பிக் பாஸ் பிரமாண்டமாக கடந்த மூன்று வாரங்களுக்கு முன் துவங்கியது. 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இதனால் கண்டிப்பாக விரைவில் வைல்டு கார்டு என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வந்த தகவலின்படி, நடிகர் மாயாவின் அக்கா ஸ்வாகதா பிக் பாஸ் 8ல் வைல்டு கார்டு போட்டியாளராக வருகிறார் என சொல்லப்படுகிறது.

இதை தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால் குக் வித் கோமாளி பிரபலங்கள் பவித்ரா மற்றும் சந்தோஷ் இருவரும் பிக் பாஸ் 8 வீட்டிற்குள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.