ஷகிலா மகளுடன் இணைந்த மற்றொரு மிஸ் திருநங்கை! பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் லிஸ்ட்?
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புகழ் பெற்ற நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 4 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வருடமும் பிக்பாஸ் 5 சீசனை கமல் தான் தொகுத்து வழங்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் தேர்வுகள் நடைபெற்று வருகிறார். பிக்பாஸ் குழு பலத்துறையில் சம்பந்தப்பட்ட 30 பிரபலங்களை தேர்வு செய்து கடைசியாக யார் யார் என்பதை தேர்வு செய்து கொண்டு வருகிறார்களாம். அந்தவரிசையில், குக்வித் கோமாளி 2 சீசன் வின்னர் கனி திரு, சுனிதா, கேபி முத்து, ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன், சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி உள்ளிட்டவர்கள் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில் நடிகை ஷகிலாவின் மகளுக் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், அவருக்கு அடுத்ததாக 2019ல் மிஸ் டிரான்ஸ் ஸ்டார் பட்டத்தை வென்ற நமீதா என்ற மாடலும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.