பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இவரா? உறுதி செய்த நடிகர் சதீஷ்! சண்டை வந்தா அப்படி கேட்பாரோ..

biggboss television gpmuthu
By Edward Sep 03, 2021 11:58 AM GMT
Report

யூடியூப் சேனலில் பிரலமானவர் ஜி பி முத்து. இணையத்தில் அவர் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் அவர். அந்தவகையில் சமீபத்தில் தன் வீடுதேடி வந்து சிலர் டார்ச்சர் செய்து வருவதாக வீடியோ ஒன்றினை வெளியிட்டு உணர்ச்சிபூர்வமாக பேசி வீடியோ வைரலானது.

இந்நிலையில், பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகியது. இதை உறுதி படுத்தும் வண்ணம் பிக்பாஸ் 5 செட்டிற்கு வெளியில் இருக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஜி பி முத்து. அந்த நிகழ்ச்சியில் சென்றால் எதுவேணாலும் அவருக்கு நடக்கும் என்று பலர் கருத்துக்களை கூறி வந்தநிலையில், காமெடி நடிகர் சதீஷ் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

உள்ள டாஸ்க் லெட்டர் மட்டும் படிக்க விட்ராதீங்க என்னடா டாஸ்க் குடுக்குராங்க, செத்த பயலுவலா, நாற பயலுவலா என்று கூறிவிடுவார் என்று பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் சதீஷ். இதிலிருந்து ஜி பி முத்து பிக்பாச் 5ற்கு செல்கிறாரோ என்று ரசிகர்களிடையே எழுந்துள்ளது.