திருமணமாகியதையே மறைத்த பிக்பாஸ் பிரபலம? இது தான் உண்மையான காரணமாம்..

Bigg Boss Star Vijay
By Edward Jul 14, 2022 08:19 AM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் கடந்த ஆண்டு ஆரம்பித்து 2022 ஜனவரி மாதம் இறுதி போட்டியோடு முடிவடைந்தது. டைட்டிலை ராஜு தட்டிச்செல்ல இரண்டாம் இடத்தினை விஜே பிரியங்கா பெற்றார். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் இசைவாணி. நாட்டுப்புற பாடகியாக மக்கள் மனதை ஈர்த்த இசைவாணி 49 நாட்கள் மட்டுமே இருந்தார்.

எலிமினேட் ஆனதையடுத்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன் குடும்பம் பற்றி கூறிய இசைவாணி தனக்கு திருமணமானதை கடைசி வரை மறைத்தபடி இருந்தார். இதற்கு என்ன காரணம் என்று அமைதியாக இருந்த இசைவாணி பல மாதங்கள் கழித்து முழு உண்மையை கூறியுள்ளார்.

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக இருந்தாலும் கானா பாடல்கள் பாட எனக்கு இருந்த சுதந்திரம் கணவர் வீட்டில் கிடைக்காமல் போனது. கானா தான் எனக்கு முக்கியம் என்று குறிப்பிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன்.

அதன்பின் அவருக்கு வேறொரு திருமணம் நடந்துவிட்டது. தற்போது அவர்கள் மீது எந்த தொடர்பும் இல்லை என்பதால் தான் இதை மறைத்தேன் தவிர வேறொருன்றும் இல்லை என்று ஓப்பனாக கூறியுள்ளார் இசைவாணி.