பிரியங்காவுக்கே டஃப் கொடுக்கும் அப்படியொரு போட்டியாளர்! பிக்பாஸ் 6 ல் அடுத்த விஜே..
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சி 6 சீசன் கூடிய சீக்கிரமே துவங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சி எப்போது ஆரம்பிக்கும் யார் தொகுத்து வழங்குவார்? யார் யார் போட்டியாளர்கள் என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் 6வது சீசனில் கிராமத்து மனம் கமிழும் நாட்டுப்புற பாடலை பாடி அசத்தி ராஜலக்ஷ்மி கலந்து கொள்ளப்போவதாக சமீபத்தில் செய்திகள் பரவியது.

தற்போது இவருக்கு அடுத்ததாக விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வரும் விஜே ஒருவரின் பெயரும் அடிப்பட்டு வருகிறதாம்.
அது வேறுமில்லை நம்ம விஜே ரக்ஷன் தானாம். குக்வித்கோமாளி 3 சீசன் முடியும் தருவாயில் இருப்பதால் அந்நிகழ்ச்சியை அடுத்து விஜே ரக்ஷனுக்கு வேறு நிகழ்ச்சிகள் இல்லாததாலும் பிக்பாஸ் 6ல் கலந்து கொள்ளப்போவதாகவும் ஒரு தகவல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.