பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரிக்கு சனம் செட்டி செய்த செயல்.. வைரலாகும் புகைப்படம்..

anitha sanam cine
By Jon Jan 22, 2021 05:35 PM GMT
Report

பிக்பாஸ் 4 சீசன் தற்போது முடிவடைந்து போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் குடுமபங்களுடனும் நண்பர்கள் சக போட்டியாளர்களுடனும் மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள். இதற்கிடையில் ரசிகர்கள் போட்டியாளர்களின் நிலை பற்றி கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிக்பாஸ் 4ல் பல குழுக்களாக சேர்ந்து விளையாடி ரசிகர்களை குழப்பியும் வந்தனர். அந்தவகையில், சனம் ஷெட்டி, அனிதா சம்பத், ஆரி மூவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாகவே நண்பர்களாக இருந்தனர். ஏன் கடைசியாக ஆரி டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்டது.

அப்போதுகூட அனிதா மற்றும் சனம் ஷெட்டி ஆரியை வெகுவாக பாராட்டிவிட்டு, ஆரி வெற்றி பெற்றது நாங்களும் வெற்றி பெற்றது போல் உள்ளது என பெருமிதத்துடன் தங்களது நட்பை வெளிப்படுத்திக் காட்டினர். தற்போது சனம் ஷெட்டி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆரிக்கு சல்யூட் அடித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சனம் ஷெட்டியை பாராட்டியது மட்டுமின்றி நீங்கள் இருவரும் இணைந்து நடித்தால் நல்லா இருக்கும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ஆரி தேங்க்யூ சனம் ஷெட்டி என பதிலுக்கு ரிப்ளை செய்துள்ளார்.


GalleryGallery