கவினுடன் காதல், கல்யாணம்..அதுக்கு காரணம் இதான்!! பிக்பாஸ் நடிகை லாஸ்லியா ஓப்பன் டாக்..
லாஸ்லியா மரியநேசன்
இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லாஸ்லியா மரியநேசன்.
இந்நிகழ்ச்சியில் கவினுடன் காதலில் இருந்து பின் பிரிந்த லாஸ்லியாவுக்கு அவரது தந்தையின் மரணம் அதிர்ச்சியை கொடுத்தது. அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா, ஒருசில படங்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கருடன் Mr.Housekeeping என்ற படத்தில் நடித்துள்ளார் லாஸ்லியா. ஜனவரி 20ஆம் தேதி ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கவினுடனான காதல், அவரின் கல்யாணம் சமயத்தில் வெளியான நெகட்டிவ் ஆன செய்திகள் பற்றி பகிர்ந்துள்ளார்.
கவினுடன் காதல், கல்யாணம்
அதில், நான் சோசியல் மீடியாவில் போட்டோ போடும்போதாகட்டும், ஆல்பம் பாடல் சமயத்தில் பேட்டிக் கொடுக்கும் போதாகட்டும், அந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது, எனக்கு அது சரியானதில்லை என்று தோன்றியது.
ஏனென்றால், அவர்(கவின்) ஒரு குடும்பத்துடன் மூவ் ஆன் ஆகிட்டாங்க. அந்த குடும்பத்தில் இருக்கும் அந்த பொண்ணோட குடும்பத்தினர் பார்க்கும் போது சரியாக இருக்காது என்ற எண்ணம் எப்போதும் எனக்கு இருந்தது. அது சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு என்னால் முடிந்த பதிலை நான் கூறியிருக்கிறேன்.
[
அதையும் தாண்டி அதைப்பற்றி கேள்வியே கேட்டுக்கொண்டிருக்கும் போது வேண்டாம் விட்டுடலாமே, நாம் பேசுற இந்த டாப்பிக், இன்னொருத்தர் வாழ்க்கையில் பிரச்சனை உருவாகுமே என்று தோன்றியது. சோசியல் மீடியாவில் என்னைப்பற்றி நெகட்டிவ் இருந்தது. நான் அதை கண்டுக்கொள்ளவில்லை.
தனிப்பட்ட விதத்தில் ஒருத்தர் ஏதாவது செய்தால் கஷ்டமாக இருக்கும். ஆனால் சோசியல் மீடியாவில் எல்லாமே ஓகே தான், அவர்கள் யார் என்று தெரியாது. என்னை திட்டுவதால் அவர்களுக்கு நிம்மதி என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை. என் அப்பா சாகுறதுக்கு நான் தான் காரணம் என்று சொன்ன போதெல்லாம் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்து இருக்கிறேன் என்று லாஸ்லியா வெளிப்படையாக பேசியுள்ளார்.