இந்த இடத்தையும் விட்டு வைக்கலையா! புகைப்படத்தை வெளியிட்ட ஷாக் கொடுத்த பிக்பாஸ் நடிகை
நடிகைகள் பலர் தற்போது தங்கள் வாழ்க்கையில் எது செய்தாலும் அதனை சமுகவலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார்கள். உடற்பயிற்சி, டான்ஸ், ரீல்ஸ் வீடியோக்கள் என்று அனைத்தையும் பதிவிட்டு வருவதை போல் நடிகை அபிராமியும் இதை கடைப்பிடித்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் மாடலிங் துறையில் இருந்த வந்து நடிகையாக அறிமுகமாகியவர் தான் அபிராமி. படம் வெளியாவதற்கு முன்பே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பின் ஒருசில படங்கள் ஆல்பம் பாடல்கள், விளம்பரங்கள் என நடித்து வரும் அபிராமி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் சமீபத்தில் கலந்து கொண்டார்.
வளையம் போட வாக்கெடுப்பு
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் அபிராமி லைவ் சாட் மூலம் ரசிகர்களிடம் கலந்து பேசியும் வருகிறார். தற்போது நான் மூக்கில் வளையம் போடவுள்ளேன் என்ற பதிவோடு, போடலாமா வேண்டாமா என்று வாக்கெடுப்பை நடத்தியுள்ளார் அபிராமி.
இதற்கு போடுங்கள் என்று 58 சதவீதமும், வேண்டாம் என்று 42 சதவீதம் பேரும் கூறியதை அடுத்து மூக்கில் வளையம் போட்டுள்ளார். இதனை இணையத்தில் பகிர்ந்த அபிராமியை கண்டபடி கேலி செய்து வருகிறார்கள்.
