36 வயதில் இரண்டாம் திருமணம்!! நடிகை பாவ்னி - அமீர் ரொமாண்டிக் போட்டோஷூட்..
பாவ்னி - அமீர்
தமிழ் சின்னத்திரையில் பாசமலர், சின்னதம்பி என சில சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் பாவனி. தெலுங்கு சீரியலில் இருந்து தமிழில் நடிக்க வந்த பாவ்னி, 2017ல் பிரதீப் குமார் என்பவரை திருமணம் செய்தார். திருமணமாகி ஒரே ஆண்டில் பாவ்னி கணவர் பிரதீப் தற்கொலை செய்து மரணமடைந்தார்.
அதிலிருந்து மீண்டு வந்த பாவ்னி, சீரியல்களும் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். கடந்த 2021ல் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அமீருடன் சேர்த்து பேசப்பட்டார்.
நிகழ்ச்சியில் எதுவும் இல்லை என்று கூறிவந்த இவர்கள் வெளியே வந்தபின் காதலிக்க தொடங்கி, தற்போது லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடிக்கவுள்ள நிலையில் திருமண அழைப்பிதழையும் இணையத்தில் பகிர்ந்திருந்தார்.
வெட்டிங் போட்டோஷூட்
இந்நிலையில் பாவ்னி தன்னுடைய வருங்கால கணவர் அமீருடன் நெருக்கமாக எடுத்த ரொமாண்டிக் வெட்டிங் போட்டோஷூட் புகைப்படங்களையும் வீடியோவையும் பகிர்ந்து அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.