விஜய் அண்ணா, என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க!! பதிலடி கொடுத்த ஜூலி..

Vijay Viral Video Maria Juliana Thamizhaga Vetri Kazhagam
By Edward Feb 25, 2026 06:34 AM GMT
Report

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வேலூரில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டு காளையை பற்றி ஒரு குட்டி கதையை சொன்னார். அதனை பலரும் விமர்சித்து பேசிய நிலையில், பிக்பாஸ் பிரபல ஜூலி ஒரு வீடியோவை பகிர்ந்து விஜய்யை பேச்சை விமர்சித்து பேசினார்.

50 - 50 ஆக இருக்கட்டும், அதை 500 ஆக்கிடாதீங்க அண்ணா என்று கூறி அட்வைஸ் கொடுக்கும் விதமாக பேசினார். ஜூலி பேசிய அந்த வீடியோவின் கமெண்ட் செக்‌ஷனில், விஜய் ஆதரவாளர்கள் பலரும் ஜூலியை கண்டித்தபடி கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

விஜய் அண்ணா, என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க!! பதிலடி கொடுத்த ஜூலி.. | Biggboss Julie Second Video Post For Tv Vijay Fans

இந்நிலையில் ஜூலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னொரு வீடியோ பதிவினை பகிர்ந்துள்ளார்.

பதிலடி கொடுத்த ஜூலி

அதில், விஜய் அண்ணா, வேலூர் பரப்புரையை பார்த்து, அதில் எதுவும் இல்லை என்ற ஆதங்கத்தில் வீடியோ போட்டேன். உங்கள் ரசிகர்கள், ரசிகர்கள் மட்டும் தான், இன்னும் அரசியல்வயப்படவில்லையே..அவர்கள் எல்லா சோசியல் மீடியாவிலும் என்னை கடித்து வைத்திருக்கிறார்கள்.

இந்த மைனர் பசங்ககிட்ட இருக்கிறது என்னவோ, ஃபேக் பிரஃபைல் மட்டும் தான். அதை வைத்து தான் என்னை மிரட்டிகிட்டு இருக்காங்க. அதுக்காக நான் பயந்து என் வீடியோவை டெலீட் செய்யமாட்டேன், என் கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன்.

விஜய் அண்ணா, என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க!! பதிலடி கொடுத்த ஜூலி.. | Biggboss Julie Second Video Post For Tv Vijay Fans

என்னை மிரட்டினால் பரவாயில்லை, என்னை சுற்றி இருப்பவர்களை மிரட்டுறாங்க. விஜய் அண்ணா, என்னை பழிவாங்க வேண்டும் என்றால், நான் என் வீட்டில் இருப்பேன், இல்லை என்றால் என் ஆஃபிஸில் இருப்பேன்.

என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க விஜய் அண்ணா, அவங்களை விட்டுவிடுங்க. ஓ நீங்க பனையூரைவிட்டு வெளியே வரமாட்டீங்கல. நான் இன்னும் உயிரோடதான் இருக்கேன். நான் பனையூர் வர்றேன் என்று கூறி வீடியோவை பகிர்ந்துள்ளார்.