காதல் வலையில் சிக்கிய நடிகை பாவ்னி! குஷியில் ஆட்டம் போட்ட பிக்பாஸ் அமீர்..

Bigg Boss Pavani Reddy
By Edward May 26, 2022 11:16 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். சமீபத்தில் பிக்பாஸ் 5 சீசனுக்கு பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் 24 மணிநேரமும் ஒளிப்பரப்பாகியது. அதன் வின்னராக பாலாஜி முருகதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் 5ல் கலந்து கொண்ட பாவ்னியும் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டார். இரு நிகழ்ச்சிகளிலும் பாவ்னி அமீரை காதலிப்பது பற்றிய கேள்விகள் தான் இணையத்திலும் நிகழ்ச்சியிலும் காணப்பட்டது.

பிக்பாஸ் 5ல் அப்படியொரு நெருக்கத்தில் பாவ்னியும் அமீரும் பழகி வந்தார். அதன்பின்பும் வெளியில் ஜோடியாக செல்வதும் நிகழ்ச்சிகளில் ஜோடிகளாக சுற்றுவதுமாக இருந்து வந்தனர். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஜோடிபோட்டு ஆடி வருகிறார்.

அப்போது விஜே பிரியங்கா காதல் இருக்கா இல்லையா என்று கேட்க நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று பாவ்னி சொல்ல காதல் இருக்கிறது என்று அமீர் பதில் கொடுத்தது வைரலானது.

இந்நிலையில் இந்தவார எபிசோட்டில் கேட்கும் கேள்விக்கு உண்மை மட்டும் கூற வேண்டும் என்ற டாஸ்க்கில் பாவ்னி கலந்து கொண்டார். அப்போது அமீர் எனக்கு பிடிக்கும் எனக்கு டைம் வேண்டும் என்று பாவ்னி முதல் முறையாக காதலை வெளிப்படுத்தியுள்ளது ரசிகர்கள் ஷாக்காகி இருந்தது.

இந்த ஒரு வார்த்தைகாக தான் பலரும் காத்திருக்கிறோம் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.