பாலாவிடம் ஆணவத்தில் அசிங்கப்பட்ட சுரேஷ்! பிக்பாஸ் கூறிய உண்மையால் தொங்கிப்போன முகம்
biggboss
bala
television
sureshchakravarthy
biggbossultimate
By Edward
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது நிறைவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் தாடி பாலாஜி வெளியேறிய நிலையில் புதிய வரவு இருக்கிறது என்று நடிகர் சிம்பு கூறிவிட்டு சென்றார்.
அது லொஸ்லியாக இருக்கும் என்று பலர் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த வார லக்ஷரி டாஸ்க் நடைபெற்று வருகிறது. பொது அறிவு கேள்விகளை வைத்திருக்கும் தங்க நாணயத்தை வைத்து போட்டியாளர் கேள்விகளை கேட்கும் போட்டியில் சுரேஷ் சக்ரவர்த்தி கேட்டுள்ளார்.
சுதந்திர இந்தியாவில் முதல் கவர்னர் ஜென்ரல் யார் என்று கேட்டுள்ளார். இதற்கு லார்ட் மவுன் பேட்டன் என்று பதிலை கூறியுள்ளார் பாலா. அது தவறு என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சுரேஷ். பின் லார்ட் மவுன் பேட்டன் தான் சரியான பதில் என்று கூறியதும் சுரேஷ் சக்ரவர்த்தியின் முகம் தொங்கி அவமானப்பட்டுள்ளார்.