பிக்பாஸ் நிகழ்ச்சியில் உருவான கள்ளக்காதல்! பிரபல நடிகை செய்த செயலால் பரபரப்பு

actress television contestant
By Jon Jan 28, 2021 04:50 PM GMT
Report

இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். முதன்முதலில் இந்தியில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் துவங்கி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியில் தற்போது பிக்பாஸ் 14வது சீசன் நடைபெற்று பிரபல நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.

114 நாட்களை கடந்து சென்ற பிக்பாஸ் 14ல் சர்ச்சையாக நடிகை ஒரு நடந்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் க்ளாமர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டும் சில படங்களில் நடித்தும் வந்தவர் நடிகை ராக்கி சாவந்த். தமிழில் கம்பீரம் படத்தில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன் ரித்தேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்து பங்கு பெற்று வருகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் நடிகை ராக்கி சாவந்துக்கும், சக போட்டியாளரான அபிநவ் சுக்லாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ராக்கி சாவந்த் தன் காதலை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே, திருமணமான அபிநவும் அவருடன் நெருங்கிப் பழகி வருகிறார்.

சமீபத்திய எபிசோடில் நடிகை ராக்கி சாவந்த் ஐ லவ் யூ அபிநவ் மற்றும் சில வார்த்தைகளை கொண்டு உடல் முழுவதும் எழுதிக்கொண்டு டாஸ்க்கில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் அரங்கேறியுள்ள ராக்கி, அபிநவ் ஆகியோரின் கள்ளக்காதலை சல்மான் கான் ஏன் கண்டிக்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

டி.ஆர்.பி.க்காக கள்ளக்காதலை ஊக்குவிப்பதா என நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர். தற்போது அப்புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.