இதுதான் பிக்பாஸ் ஷிவினின் அப்பா, அம்மாவா!! வைரலாகும் புகைப்படம்..
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் 6 சீசனையும் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த 5வது சீசனில் நமீதா என்கிற திருநங்கை பிக்பாஸ் வீட்டிற்கு சென்று சில பிரச்சனையால் வெளியேறியதை தொடர்ந்து சீசன் 6ல் ஷிவின் என்கிற மாடலிங் திருநங்கை உள்ளே சென்றுள்ளார்.
தன் குடும்பத்தின் கஷ்டங்களை எடுத்து கூறி அனைவரையும் நெகிழவைத்த ஷிவினின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அம்மா, அப்பா, சகோதரியுடன் குழந்தையாக இருக்கும் புகைப்படம் தான் அது.
ஆனால் அப்புகைப்படத்தில் இருப்பது ஷிவின் குடும்பம் இல்லை என்றும் மலையாள பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட கிளாசிக் நடனகலைஞர் சந்தியா மனோஜின் குடும்ப புகைப்படம் என்று தெரியவந்துள்ளது.
ஷிவினை போல் அவர் இருப்பதால் இணையத்தில் இந்த போலியான புகைப்படம் வெளியாகியுள்ளது. ஷிவினின் குடும்ப புகைப்படத்தை தனிப்பட்ட விதத்தில் வைத்து பாதுகாத்து வருகிறார்.