ஹீரோயின் அவதாரம் எடுத்த பிக்பாஸ் மாயா!! அதுவும் யாருடன் ரொமான்ஸ் செய்கிறார் தெரியுமா...

Bigg Boss Maya S Krishnan
By Edward Mar 15, 2024 03:30 AM GMT
Report

மேடை நாடகங்களில் நடித்து நடிப்பு கற்றுத்தரும் கலைஞராக செயல்பட்டு பிரபலமானவர் மாயா கிருஷ்ணன். பல படங்களில் நடித்து வந்த மாயா, விக்ரம் படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு பின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 3 இடத்தினை பிடித்தார் மாயா. ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தால் அதிகமாக பிக்பாஸ் 7 சீசனில் விமர்சிக்கப்பட்டவராக மாயா திகழ்ந்து வந்தார்.

இதன்பின் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒருசில நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வந்த மாயா, தற்போது கதாநாயகியாக களமிறங்கவிருக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் இயக்குனர் கிருஷ்ண பிரசாத் இயக்கத்தில் நடிகர் ராம்ஸ் என்பவர் நடிக்கும் பைட்டர் ராஜா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். தற்போது அப்படத்தின் பர்ஸ்ட்லுக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.