ஆரம்பமே இப்படியா பண்ணுவீங்க!! முதல் ஆளாக வெளியேறிய பிக்பாஸ் 8 பெண் போட்டியாளர்..

Vijay Sethupathi Bigg Boss Vijay Television Bigg Boss Tamil 8
By Jai Oct 07, 2024 03:45 AM GMT
Report

பிக்பாஸ் 8

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நடிகர் விஜய் சேதுபதி தலைமையில் நேற்று அக்டோபர் 6ஆம் தேதி ஆரம்பித்துள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு 18 போட்டியாளர்களை விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். போட்டியாளர்களிடம் தன்னுடைய ஸ்டைலில் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் விஜய் சேதுபதி. நிகழ்ச்சி நிறைவடைந்த போது, அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு எவிக்‌ஷன் இருக்கும் என்று கூறி பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து சென்றார் விஜய் சேதுபதி.


சாச்சனா எவிக்ட்

இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பமாகி ஒரு நாளில் ஒரு போட்டியாளர் எவிக்ட் செய்யப்பட்டு வெளியில் அனுப்பட்டுள்ளார். அதுவேறு யாரும் இல்லை விஜய் சேதுபதிக்கு மகாராஜா படத்தில் மகளாக நடித்த சாச்சனா தானாம். ஆரம்பமே இப்படியா பண்ணுவீங்க என்று நெட்டிசன்கள் புலம்பி வருகிறார்கள்.

Gallery