பிகில் 300 கோடியா? மொத்தமே இவ்வளவுதான் என கூறிய பிரபலம்..
தமிழில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய்யுடன் மூன்றாவதாக இணைந்த படமான பிகில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மீதான நல்ல வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தார்கள்.
பிகில் படத்தின் மொத்த வசூல் 300 கோடியை தாண்டியது என்று பல கூறி வந்தனர். ஆனால், அது உண்மையில்லை என்று உண்மையை வெளிப்படையாக திருச்சியை சேர்ந்த தியேட்டர் உரிமையாளர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
பிகில் 300 கோடி என்பது வடிகட்டின பொய் எனவும் பிகில் திரைப்படம் தமிழ்நாட்டில் மற்றும் 130 கோடி வசூல் தான் பெற்றது. சில நடிகைகள் தங்கள் படத்தின் வசூல் பெரியளவில் பெற்றதாக கூறுவதும் சிலர் உண்மையை அப்படியே கூறுவதும் சினிமாவில் இயல்பு. ஆனால், பல ஊடகங்கள் படத்தின் வசூலை பற்றி அவதூராக விமர்சனம் செய்வது தவறாக இருக்கிறது.
ஒரு சில ஊடகங்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட தியேட்டர் உரிமையாளர் இடமும் டிஸ்ட்ரிப்யூட்டரிடமும் கேட்டு வசூல் எவ்வளவு என்று கூறி வருகிறார்கள்.
ஒரு படத்தின் வசூல் ரசிகர்களின் வரவேற்பை பொருத்துதான் அமையும். அவர்களின் வருகையையும் விமர்சனங்களுமே படத்தில் வசூலை உயர்த்தும் என்று கூறியுள்ளார்.